இலட்சிய திட்டங்களில் இருந்து பின்வாங்கியுள்ளது இலங்கை

இலட்சிய திட்டங்களில் இருந்து  பின்வாங்கியுள்ளது இலங்கை

இலட்சிய திட்டங்களில் இருந்து இலங்கை பின்வாங்கியுள்ளது.

ரசாயன உர இறக்குமதிக்கான தடையை ஏற்படுத்திஇ உலகின் முதல் முற்றிலும் இயற்கை வேளாண்மை நாடாக உருவெடுக்கும் லட்சிய திட்டங்களில் இருந்து இலங்கை பின்வாங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த வைகாசி மாதத்தில் இரசாயன உரங்களுக்கு முழுத் தடை விதித்தார். அவர் இலங்கையின் விவசாயத்தை 100 சதவீதம் இயற்கையாக்க விரும்புவதாகக் கூறினார்.

தற்போது இலங்கை தேயிலை விவசாயிகளுக்கு உதவுவதற்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
'தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் பாரிய வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டுஇ அமோனியம் சல்பேட் இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது' என்று பத்திரன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். உள்ளூர் விவசாயத் தேவைகளுக்குத் தேவையான அளவு இயற்கை உரத்தை நாட்டில் உற்பத்தி செய்யும் வரை இரசாயன உர இறக்குமதி தொடரும் என்றார்.

ஜனாதிபதியின் கொள்கை தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிற விவசாயிகளிடையே கோபத்தைத் தூண்டியதுஇ அவர்கள் இயற்கை உரங்களின் பற்றாக்குறை உற்பத்தியில் பற்றாக்குறைக்கு வித்திடும் என்று எச்சரித்தனர்.

எரிபொருள்இ உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது சிக்கல்களை ஏற்படுத்தும்.

கடந்த வாரம்இ லிதுவேனியாவில் இருந்து 30000 டன் பொட்டாசியம் குளோரைடை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் அதன் சொந்த தடையை மீறியதhக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதை 'இயற்கை உரம்' என்று அரசுஅழைத்தது. 

'நாங்கள் ஒரு பிடிவாதமான அரசாங்கம் அல்ல' என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் டல்லாஸ் அழகப்பெரும பத்திரனவுடனான அதே மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.