உலக அரங்கில் மலேசியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிக் பொஸ் நாடியா சாங்?

உலக அரங்கில் மலேசியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிக் பொஸ் நாடியா சாங்?

உலக அரங்கில் மலேசியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிக் பொஸ் நாடியா சாங்?

பிக் பொஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடமாக ஒளிபரப்பாகும் பிரமாலமான நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இந்த வருடத்துக்கான நிகழ்ச்சியில் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட சுவாரஸ்யம் கிடைக்கவில்லை என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவைச் சேர்ந்த மொடல் அழகி நாடியா சாங் முதலாவதாக வெளியேற்றப்பட்டார். இவருடைய வெளியேற்றம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அவர் பிக் பொஸ் வீட்டின் உள்ளே பகிர்ந் கதை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது.  

அதாவது தமது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொள்ளும் சவாலில் நாடியா சாங் தான் 15 வயதில் மலேசியாவில் உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்ததாகவும், அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் பொலிசாரிடம் அடி வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இவை தனது தாயாரினால்தான் நடந்தது என்று உருக்கமாக பகிர்ந்து போட்டியாளர்களையே மெய்சிலிர்க்க வைத்திருந்தார்.

இதனைப் பார்த்த பலர் மலேசியாவில் 18 வயதுக்கு குறைவாக வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை எனவும், சிறுவர்களையோ, பெண்களையோ பொதுவாக பொலீசார் அடிப்பதில்லை எனவும்மலேசியா வாழ் தமிழர் ஒருவர் மனது பதிவை வெளியிட்டிருந்தார். அவருடைய ஒளிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மலேசியா பற்றியும் அனைவரும் திரும்பிப்பார்க்கும்படி செய்துவிட்டது என்றே கூறலாம்.