குறைந்தது இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சொத்து! அடுத்தது என்ன?

நாட்டில் அந்நியச் செலாவணி தொடர்பாக பலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.
மக்கள் இது தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்த சூழ்நிலையில் இது கவலைக்குரிய விடயமாக இருக்கின்ற போதிலும் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட நிதி நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு இருப்பில் மாற்றம் ஏற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியில் 14.10.2021 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் கடந்த ஆடி மாதம் வெளிநாட்டுச் சொத்து 982 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அதே வேளை ஆவணி மாதத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்தது.
ஆனால் இலங்கையில் இது போன்ற சந்தர்ப்பங்கள் 15 முறை நிகழ்ந்தள்ளதாக தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் இது தற்காலிக நிலையே எனவும், வரும் நாட்களில் ஏற்படக்கூடிய நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் மாற்றமடையலாம் எனவும் தெரிவித்தார்.