சட்டத்தை மதிக்காதவர் சட்டம் சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்கு தலைவரா?

சட்டத்தை மதிக்காதவர் சட்டம் சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்கு தலைவரா?

சட்டத்தை மதிக்காதவர் சட்டம் சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்கு தலைவரா?

இலங்கையில் தற்போது இருக்கும் சட்டத்தை சரியான முறையிலும், அனைவருக்கும் சமமாகவும் நடைமுறைப்படுத்தினாலேயே நாட்டிலுள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. தற்போது விவசாய நிலங்களுக்கு உரத்தட்டுப்பாடு, ஆசிரியர் போராட்டம், மீனவர்களின் போராட்டம் என சுற்றிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தீர்க்க வேண்டிய, அவசியமான விடயங்களை அதனை அரசு மேற்கொள்ளாது இன்று புதிதாக சட்டம் சம்பந்தமான செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயலணி ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறியப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசு மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான உபயோகமில்லாத செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினருக்கும், ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் சட்டமானது சமத்துவமாக இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட செயலணிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, நாட்டில் சட்டத்தை மதிக்காத ஒருவரை ஜனாதிபதி நியமித்திருப்பது சட்டத்தில் நம்பிக்கை கொண்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்ற தொனிப்பொருளில் பதிவு செய்துள்ளார்.

இவருடைய இக்கருத்து சில காலங்களுக்கு முன் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதி ஒருவரின் உடலை தகனம் செய்ய நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கிய போதிலும், அதனை மீறி உடல் தகனம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் ஆதரவாக அங்கே விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.