சம்பளம் இன்றி 20க்கு20 போட்டிகளில் பணியாற்ற மஹேந்திரசிங் டோனி தெரிவிப்பு

சம்பளம் இன்றி 20க்கு20 போட்டிகளில் பணியாற்ற மஹேந்திரசிங் டோனி தெரிவிப்பு

சம்பளம் இன்றி 20க்கு20 போட்டிகளில் பணியாற்ற மஹேந்திரசிங் டோனி தெரிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் நாடுகளில் உலகக் கிண்ண 20க்கு 20 தொடர் நடைபெற்று வருகின்றது. இதற்கு மஹேந்திரசிங் டோனி எதுவித கட்டணங்களும் பெறாமல் பணியாற்றுவதற்கு முன்வந்துள்ளதாக இந்திய கிரிக்கற் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் சரௌவ் கங்குலி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கற் அணியில் குறிப்பிடத்தக்க வீரர்களுள் ஒருவராகவும், காலம் மறக்கமுடியாத வீரராகவும் இவர் திகழ்ந்து வருகின்றார் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. இறுதியாக நடைபெற்ற 2021 ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வென்று சென்னை சுப்பர் கிங் அணிக்கு வெற்றி வாகை சூடிக்கொடுத்த பெருமையுடன் தற்போது வெளியாகியுள்ள செய்தியால் டோனியின் மதிப்பு இன்னும் அதிகரித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த உலகப்போட்டியின் போது மட்டுமே அவருடைய பணி இருக்கும் என்று கிரிக்கற் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.