தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் - உலக தங்க அமைப்பு

தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் - உலக தங்க அமைப்பு

தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் - உலக தங்க அமைப்பு

லக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இலங்கையை பொறுத்தவரை ஒரு பவுன் தங்கம் 125000 வரை உயர்வடைந்தது. இதனால் தங்கத்தை கொள்வனவு செய்வோரது எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோணா பரவலையடுத்து இந்த ஆண்டில் தங்கத்திற்கான கேள்வி குறைவடைந்திருந்தது. இந்த ஆண்டு குறைவடைந்திருந்த கேள்வி 2022ல் அதிகரிக்கலாம் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்திற்கான கேள்வி அதிகரிக்குமாயின் இப்போது இருப்பதைவிட இன்னும் பாரிய அளவில் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என உலக தங்கக் கவுன்சில் தமது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் பரவலாக கொரோணாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுக்கட்டுப்பாடுகள் நிலவுவதால் 2021 இறுதிவரை தங்கத்திற்கான கேள்வி குறைவாகவே இருக்கும் என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையே இலங்கையில் கட்டுப்பாட்டில் இல்லாத போது தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.