நாட்டின் தலைநகரில் திடீரென மூடப்படும் வர்த்தக நிலையங்கள்

நாட்டின் தலைநகரில் திடீரென மூடப்படும் வர்த்தக நிலையங்கள்

நாட்டில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட சடுதியான ஏற்றம் காரணமாக பாரிய இடைஞ்சல்களுக்கு முகம்கொடுப்பதாக கொழும்பு புறக்கோட்டை உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலை காரணமாக தொடர்ந்து உணவகங்களை நடத்த முடியாமல் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் கொழும்பு புறக்கோட்டை மட்டுமல்ல தலைநகரிலுள்ள பெரும்பாலான உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் என்பன திடீரென மூடப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்துக்கும் மேலாக பயணக்கட்டுப்பாட காரணமாக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்ட கடைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வால் மீண்டும் மூடப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரபே தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்றி விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலை நாட்டில் ஏனைய மாவட்டங்களிலும் உருவாகுமா என்று தெரியவில்லை. இருப்பினும் நாடளாவிய ரீதியில் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.