பாராளுமன்ற உறுப்பினர் (இலங்கை) ரிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் (இலங்கை) ரிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை

ஆறு மாதங்கள் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்து கடவுளின் கிருபையால், நான் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நான் நிரபராதியாக இருந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாள் தொடக்கம் என்னுடைய நியாயமான விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்ததோடு மட்டுமல்லாமல் எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களளுடைய பிரார்த்தனைகள் நியாயமானது. அதனால் அனைத்தும் வீணாகப் போகாது என்பது என்னுடைய நம்பிக்கை.

எனது விடுதலைக்காக பாடுபட்ட, குரல் கொடுத்த சகோதர கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாடுபட்ட வழக்கறிஞர்கள், சர்வதேச ரீதியாக பணியாற்றியவர்கள் மட்டுமல்லாது ஊடக தர்மத்தைக் காத்து அதன் நெறிமுறைகளை கடைப்பிடித்து மனசாட்சியுடன் செயல்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன, மத மற்றும் கட்சி பாகுபாடுகளுக்கு அப்பால் நியாயமாக செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இந்த ஜாமீன் விடுதலை ஒரு முடிவல்ல. சொல்ல முடியாத அளவு கஸ்ரங்களை அனுபவித்த எங்கள் உடன்பிறப்புகள் பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.

அவர்களுடைய விடுதலைக்காக நாங்கள் எல்லோரும் தொடர்ந்து பிரார்த்திப்போம். உங்கள் நம்பிக்கையை காப்பதற்காக என்னுடைய குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும். நான் விரும்புகின்ற என்னுடைய மக்களின் பணி தொடரும் என்றார்.