மெட்டி ஒலி புகழ் உமாமகேஸ்வரி 40 வயதில் அதிர்ச்சி மரணம்!

மெட்டி ஒலி புகழ் உமாமகேஸ்வரி 40 வயதில் அதிர்ச்சி மரணம்!

இந்திய பிரபல தொலைக்காட்சியான சன் ரீவியில் 2002 ம் ஆண்டு காலப்பகுதியில் பலராலும் பாராட்டப்பட்டு, வெற்றிகரமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மெட்டி ஒலி தொடரில் திருமுருகன் இயக்கத்தில் அவருக்கு சோடியாக நடித்த உமா மகேஸ்வரி மாரடைப்பால் காலமானார்.

உமா மகேஸ்வரி மெட்டி ஒலி தொடரில் நடித்ததற்கு பிறகு வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை என்பதோடு அதன் பிறகு நடிப்பதை நிறுத்தி திருமண பந்தத்தில் இணைந்து விட்டார். இவர் வெற்றிக் கொடிகட்டு எனும் திரைப்படத்தில் நடிகர் பார்த்தீபனுக்கு தங்கையாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

40 வயதில் யாரும் எதிர்பார்க்காதவாறு மரணித்த உமா மகேஸ்வரியின் இழப்பு சின்னத்திரை மட்டுமல்லாது திரைப்படத் துறையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.