வேகக் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தது

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தது

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தது கனரக வாகனம்

கிளிநொச்சி நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்  வேக கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற   விபத்து சம்பவத்தில்  வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இதேவேளை விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

-கிளிநொச்சி செய்தியாளர் தமிழ்-