வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால் விடும் குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர்

வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால் விடும் குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர்

வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால் விடும் குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர்

கடந்த சில வாரங்களாக அதிபர், ஆசிரிய சம்பள முரண்பாடு தொடர்பாக பல போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. இந் நேரத்தில் இலங்கை அரசு நாளை (21.10.2021) பாடசாலைகளை மீளத் திறக்க முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை மாணவர்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அதிபர், ஆசிரிய சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கூறி போராட்டம் மிக உச்ச நிலையை அடைந்துள்ளது. இந் நிலையில் பதவி நிலையில் உள்ள அரச அதிகாரிகள் வெளியிட்டதாக கருதப்படும் செய்திகள் தொடர்பில் முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விடுத்ததாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவருடன் எமது செய்தித்தளம் தொடர்புகளை ஏற்படுத்திய போது கிளிநொச்சி அரச அதிபர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டு நாளை பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என்று தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் காணக் கிடைத்ததாகவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதற்கு துணைநிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் வடமேல் மாகாண ஆளுநர் பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதாக தெரிவித்த கருத்துக்கு பலரும் தமது கண்டணங்களை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சரத் பிரேமசிறி முடிந்தால் ஆசியர்களது சம்பளத்தை குறைத்து காட்டட்டும் என்று ஆளுநருக்கு சவால் விடுத்துள்ளார். இதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பளத்தைக் குறைக்க விடப்போவதில்லை என ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.