விருதுகளை அள்ளிய பொட்டு குறும்படம் - கோல்டன் லீஃப் திரைப்பட விழா

விருதுகளை அள்ளிய பொட்டு குறும்படம் - கோல்டன் லீஃப் திரைப்பட விழா

இலங்கையில் திரைப்படத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. பல கலைஞர்கள் பல பகுதிகளிலிருந்தும் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையை பொறுத்தவரை இந்திய சினிமாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதால் பொருளாதாரம், வளங்கள், தொழிநுட்பம் போன்ற இன்னும் பல காரணங்களினால் பின்தங்கியே இருக்கின்றது. இருந்தும் பல நிகழ்வுகளை நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் உருவாக்கி ஈழத்து சினிமாவை வளர்ப்பதில் பங்கெடுத்துள்ளன.

அந்த வகையில் கோல்டன் லீஃப் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் 'பொட்டு' குறும்படம் பல விருதுகளை வென்றுள்ளது.

இலங்கை நடிகை, இயக்குநர், எழுத்தாளர் என்ற பல்வேறு பரிமாணங்களில் திகழும் நவயுகா குகராஜா இயக்கி நடித்த இத்திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. சிறந்த நடிகை – நவயுகா குகராஜா
  2. சிறந்த குழந்தை நடிகை – ஷரோன் பிரஸி
  3. சிறந்த படத்தொகுப்பாளர் – ஜோசுவா ஹெபி
  4. சிறந்த அறிமுக இயக்குனர் – நவயுகா குகராஜா
  5. சிறந்த தயாரிப்பாளர் – நவயுகா குகராஜா
  6. சிறந்த திரைக்கதை எழுத்தாளர் – நவயுகா குகராஜா
  7. சிறந்த குறும்படம் – பொட்டு

ஆகிய விருதுகளையே 'பொட்டு' குறும்படம் வென்றுள்ளது.