விவசாயிகளுக்கு 3 இலட்சம் உதவித்தொகை?

விவசாயிகளுக்கு 3 இலட்சம் உதவித்தொகை?

அரை ஏக்கரை விட அதிகமான நிலத்தில் விவசாயம் மேற்கொள்வதற்கு 3 இலட்சம் உதவித் தொகையை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கம்பளையில் விவசாயப் பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் விவசாய நிலத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாததும், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்றதுமான நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விசேடமாக தயாரிக்கப்பட்ட திரவ வடிவிலான உரத்தை 22 இலட்சம் லீற்றர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய இருப்பதாக அறிய முடிகின்றது.

மேலும் மேலே குறிப்பிட்ட திரவ உரத்தை முதற்கட்டமாக வரும் 19ம் திகதி நாட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.