வவுனியாவில் கிரிக்கற் சங்கம் நடத்தும் கிரிக்கற் சுற்றுப்போட்டியை கைவிடும் அபாயம்?

வவுனியாவில் கிரிக்கற் சங்கம் நடத்தும் கிரிக்கற் சுற்றுப்போட்டியை கைவிடும் அபாயம்?

வவுனியாவில் கிரிக்கற் சங்கம் நடத்தும் கிரிக்கற் சுற்றுப்போட்டியை கைவிடும் அபாயம்?

வவுனியாவில் கிரிங்கற் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையே ஒவ்வொரு வருடமும் சுற்றுப்போட்டி நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த வருடம் (2021) சுற்றுப் போட்டி ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மழை மற்றும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் அந்தப் போட்டிகள் மீளவும் நடைபெறுமா என்று வவுனியா கிரிக்கற் சங்க தலைவர் திரு.யோகேந்திரன் ரதீபன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பின்வருமாறு தெரிவித்தார்.

அதாவது கடந்த காலங்களில் ஏற்பட்ட கால நிலை மற்றும் கொவிட் கட்டப்பாடுகள் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தன். இப்போது அதனை மீள நடத்துவது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது. அதற்கு வருகின்ற நாட்களில் வாக்குரிமையுடைய கழகங்களை அழைத்து கலந்துரையாடி அதில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

மேலும் இனி வரும் காலம் மாரி காலமாக உள்ளதால் தொடர்ந்து போட்டிகளை நடத்த இடையூறு ஏற்படலாம். அவ்வாறு இருப்பின் இவ்வருடம் போட்டிகள் நடைபெற்றதாக கருதி இருக்கும் நிலையில் போட்டிகள் கைவிடப்பட முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவித்தார். எனினும் முடிவுகள் கலந்துரையாடலிலேயே எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா அல்லது கைவிடப்பட வாய்ப்புகள் இருக்கின்றதா என்பது திட்டவட்டமாக தெரியவில்லை.